உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டம் நர்கி பகுதியில் ஏற்பட்ட கொடூர சம்பவம் ஒன்று தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு இளைஞர், ஒரு இளம் பெண்ணை மிரட்டி கடந்த ஆண்டு (நவம்பர் 1, 2024) நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்குப் பிறகு, அந்தப் பெண்ணை தனது சகோதரரும் மைத்துனரும் உதவியுடன், ரயிலில் சண்டிகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு 15 நாட்கள் வரை ஹோட்டலில் வைத்துப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு, 2025 ஜூன் 7-ம் தேதி மீண்டும் ரயிலில் அனுப்பி வைத்துள்ளார்.

வீட்டிற்கு திரும்பிய அந்த பெண், தன் பெற்றோரிடம் நடந்ததை கூறியபின், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதன் பேரில், போலீசார் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.