உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மிகவும் விசித்திரமான மற்றும் நம்ப முடியாத ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு வியாபாரி வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு மசூதி அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
மேலும் அந்த நேரத்தில், அந்தப் பையில் ஏதோ உணவுப் பொருள் இருப்பதாக எண்ணிய தெரு நாய் ஒன்று, பணப் பையைத் தன் வாயால் கவ்விக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடிவிட்டது. வியாபாரி திரும்பி வந்து பார்த்தபோது பணம் இருந்த பையைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
सोशल मीडिया पर एक सीसीटीवी फुटेज वायरल हो रहा है। फुटेज में एक काले रंग का कुत्ता नोटों से भरा बैग लेकर भागते दिख रहा है। फुटेज बिजनौर जिले का बताया जा रहा है। pic.twitter.com/vW9jUCHGhC
— Dinesh Rathour Journlist (@DineshRathour8) May 24, 2026
“>
இதனால் யாரோ திருடர்கள் பணத்தைத் திருடிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்து புகார் அளித்த நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் உண்மை தெரியவந்தது. திருடியது எந்த மனிதனும் அல்ல, மாறாக ஒரு தெரு நாய் என்பது தெரியவந்ததும் அனைவரும் வியப்படைந்தனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
