புனேவின் பிம்பிரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 24 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 21 அன்று காலை, அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அப்பெண்ணின் அருகில் அமர்ந்து அநாகரீகமாக நடந்துகொண்டார்.
மேலும் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அந்த நபரை கண்டித்ததுடன், தனது செல்போனில் அந்தச் செயலைப் படம்பிடிக்கத் தொடங்கினார். இதைக் கவனித்த அந்த நபர், பெண்ணை மிரட்ட முயன்றுள்ளார். அவர் தன்னைப் படம்பிடிப்பதைத் தடுக்க முற்பட்டபோது, அப்பெண் அங்கிருந்து நகர, அந்த நபர் மேம்பாலத்திலிருந்து குதித்துத் தப்பி ஓடினார்.
View this post on Instagram
“>
இதுகுறித்து பிம்பிரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பெண் எடுத்த காணொளியின் உதவியுடன் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
