உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், கணிதத் தேர்வில் வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, தனது கவிதை மற்றும் உணர்ச்சிகரமான வரிகளால் விடைத்தாள் முழுவதையும் நிரப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் கோலு குமார் என்ற அந்த மாணவன், விடைத்தாளில் ஆசிரியரிடம் தன்னை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்குமாறு கெஞ்சுவதும், தனது காதலி ‘நேகா’வைப் பற்றியும், ‘ஃப்ரீஃபயர்’ விளையாட்டுப் பற்றியும் எழுதியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த விசித்திரமான செயல் அதோடு நின்றுவிடவில்லை விடைத்தாளில் 33 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, காகிதத்திற்குள் 2,100 ரூபாயையும் வைத்துள்ளான். தேர்வை விடத் தனது கற்பனைத் திறனையும், நகைச்சுவை உணர்வையும் விடைத்தாளில் கொட்டிய அந்த மாணவனின் செயல், ஆசிரியர்களுக்கும் சமூக வலைதளப் பயனர்களுக்கும் சிரிப்பையும் அதிர்ச்சியையும் ஒருசேரக் கொடுத்துள்ளது.
