தற்காலக் தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறை காரணமாகப் பலருக்கும் ஏற்படும் மிக முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று ‘கல்லீரலில் கொழுப்பு படிதல்’  ஆகும். இந்த நோயைக் தொடக்க நிலையிலேயே கவனிக்கத் தவறினால், கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்படலாம். இந்நிலையில், கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், படிந்துள்ள கொழுப்பைக் குறைக்கவும் சில குறிப்பிட்ட பழங்கள் பெரிதும் உதவுகின்றன என்று குடலியல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலில், சிட்ரஸ் வகை பழங்களான எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள்  கல்லீரல் நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து, நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. அடுத்ததாக, நாவல் பழம் மற்றும் நெல்லிக்காய் ஆகியவை கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டவை. மூன்றாவதாக, ஆப்பிள் பழத்தில் உள்ள ‘பெக்டின்’  எனப்படும் நார்ச்சத்து, செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்களை பிணைத்து வெளியேற்றி, கல்லீரலின் சுமையைக் குறைக்கிறது.

நான்காவதாக, திராட்சை பழத்தில் உள்ள ‘ரெஸ்வெராட்ரோல்’  எனும் சத்து கல்லீரல் செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. ஐந்தாவதாக, மாதுளை பழம் கல்லீரலின் இயல்பான செயல்பாட்டிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ஆறாவதாக, பப்பாளி பழத்தில் உள்ள இயற்கை என்சைம்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுத்து, செரிமானத்தைச் சீராக்குகின்றன.

இவை அனைத்தையும் விட மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஏழாவது பழமாக மருத்துவ உலகத்தால் பரிந்துரைக்கப்படும் ஆவகேடோ  ஆகும்! பழம் என்றாலே இனிப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை உடைக்கும் இந்த ஆவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புச் சத்துக்களும் , ‘குளுடாதயோன்’  எனும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியும் நிறைந்துள்ளன. இவை கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, கல்லீரல் செல்கள் தங்களைத்தானே புதுப்பித்துக் கொள்ளப் பெரிதும் உதவுகின்றன என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.