வியட்நாம் சுற்றுப்பயணத்திற்காக ஒரு பெண் ஊழியர் எடுத்திருந்த விடுமுறையை அவரது மேலாளர் ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அலுவலகம் என்றும் பாராமல் மேலாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்தச் சமயத்தில் மேலாளரை மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதோடு, சக ஊழியர்கள் முன்னிலையிலேயே அவரை அவமதித்துள்ளார். இந்தச் சம்பவம் அங்கிருந்த ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பரவியதால், கார்ப்பரேட் கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் ஒழுக்கம் குறித்துப் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
Aur karo corporate me naukri pic.twitter.com/c0V3oi7PXd
— Prof cheems ॐ (@Prof_Cheems) February 25, 2026
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இரண்டு விதமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். ஒரு தரப்பினர், அலுவலகத்தில் மேலாளரை இப்படி ஒருமையில் திட்டுவது மிகவும் தவறான மற்றும் தொழில்முறைக்கு (Professionalism) எதிரானது என்று கூறுகின்றனர். மற்றொரு தரப்பினரோ, ஏற்கனவே திட்டமிட்ட பயணத்திற்கான விடுமுறையை கடைசி நேரத்தில் ரத்து செய்வது ஊழியர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தரும் என்றும், அதன் வெளிப்பாடே இந்த ஆத்திரம் என்றும் வாதிடுகின்றனர். எனினும், அந்தப் பெண் பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் அவரது நடத்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
