சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம்மை வாயடைக்க வைக்கும். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோவில் ஒரு முதியவர் தக்காளி விற்பனை செய்து கொண்டிருக்கிறார். பொதுவாக தராசு என்றால் ஒரு பக்கம் எடைக் கல்லும், மறுபக்கம் பொருளும் இருக்கும். ஆனால், இந்த முதியவர் வைத்திருக்கும் தராசில் எடைக்கல்லுக்கான தட்டே இல்லை. மாறாக, நான்கு தனித்தனி நூல்களைக் கொண்டு மிக லாவகமாக தக்காளியின் எடையை அவர் அளக்கிறார்.

​இந்த வினோதத் தராசைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “இது என்ன மாதிரியான அறிவியல்?” என்றும், “கிராமத்து மனிதர்களின் அறிவு வியக்க வைக்கிறது” என்றும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவால் எடைக்கல்லே இல்லாமல் துல்லியமாக எடை போடும் அந்த முதியவரின் திறமை இப்போது இணையத்தில் ‘டிரெண்டிங்’ ஆக உள்ளது.