மலேசியாவில் வாடகை காரில் பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஓட்டுநர், அந்த நிறுவனத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது ஓடும் காரில், ஓட்டுநர் பெண் பயணியிடம் மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் முகநூலில் (Facebook) பதிவேற்றியதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
அந்த வீடியோவில், ஓட்டுநர் தனது கையை பெண் பயணியின் தொடைக்கு அருகே நீட்டியபடியே, “உனக்கு என்ன வயது? உன்னுடன் ஒரு அறை எடுத்து தங்க எவ்வளவு பணம் தர வேண்டும்?” என மாண்டரின் மொழியில் அருவருக்கத்தக்க வகையில் கேட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தன்னைத் தற்காத்துக் கொள்ள ஆடைகளை இறக்கி மூடியபடி அழுதுள்ளார்.
இந்தச் சம்பவம் அந்த நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் பொதுச் சேவை வாகன உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இனி அவர் எந்த ஒரு இ-ஹெய்லிங் (e-hailing) நிறுவனத்திலும் பணியாற்ற முடியாது,” என்றார்.
Grab Malaysia has apologised following allegations that a female passenger was sexually harassed by an e-hailing driver in Johor. In a comment posted on Instagram, the company said it was “deeply sorry” over the incident and acknowledged the seriousness of the matter.
byu/stormy001 inmalaysia
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட ஓட்டுநரை தங்களது செயலியிலிருந்து நிரந்தரமாகத் தடை செய்துள்ளதாக ‘கிராப்’ (Grab) நிறுவனம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் இந்தச் சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அனைத்து இ-ஹெய்லிங் நிறுவனங்களையும் அழைத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு நிலப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
