விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைக்காக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், இறுதியில் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவமாக மாறியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் வழக்கமாக பயணங்களின் போது ஜன்னல் ஓர இருக்கை யாருக்கு என்பதில் சிறுபிள்ளைத்தனமான போட்டிகள் நடப்பது சகஜம் தான். ஆனால், இந்த தம்பதியினர் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டனர்.
Window Seat के लिए पति ने Air Hostess तक से शिकायत कर दी😭😂
लेकिन Wife ने seat देने से साफ इंकार कर दिया। pic.twitter.com/JpdfTjSKj8
— Jamal | Viral desk (@jamalk38) June 10, 2026
“>
இதனால் இவர்களின் இந்த விசித்திரமான மோதல் சக பயணிகளை வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. இந்த வீடியோவில், ஜன்னல் சீட்டுக்காக இருவரும் ஒருவரையொருவர் பிடித்து இழுத்துக்கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகிறது. இவர்களின் சண்டையைத் தீர்க்க விமானப் பணிப்பெண்களும் சக பயணிகளும் எவ்வளவோ முயன்றும், இருவரும் சமாதானமடையாமல் தங்களது பிடிவாதத்தைத் தொடர்ந்தனர்.
இறுதியில், இந்த சண்டை ஒரு எதிர்பாராத திருப்பத்துடன் முடிவடைந்தது, அது அங்கிருந்த அனைவரையும் வாயடைத்துப் போகச் செய்தது. தம்பதிகளுக்குள் இருக்கும் பொதுவான சண்டையாகத் தொடங்கி, ஒட்டுமொத்த விமானத்தையே பரபரப்பாக்கிய இந்த வீடியோ, தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் வேடிக்கையான கருத்துகளையும் கிளப்பியுள்ளது.
