தமிழக அரசியல் வட்டாரத்தில் “அதிமுக-வின் அடுத்த கொறடா யார்?” என்ற விவாதம் மிகத் தீவிரமாக எழுந்துள்ள நிலையில், இது குறித்துச் சபாநாயகர் JCD பிரபாகரன் அவர்கள் ஒரு அதிரடி விளக்கத்தை அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி வரும் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளான ஜூன் 18-ஆம் தேதிக்கு முன்னதாகவே அதிமுக கொறடா யார் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

​முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் குழு தலைவராக முறைப்படி சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வமாக ஒரு முக்கிய மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் JCD பிரபாகரன், இது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும், இன்னும் சில தினங்களில் இதற்கான இறுதி முடிவு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

தவெக ஆட்சியில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நெருங்கி வரும் வேளையில், எதிர்க்கட்சியான அதிமுக-வின் கொறடா மற்றும் தலைவர் பதவிக்கான இந்த நகர்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.