அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் எப்ஸ்டீன் விவகாரத்தில் சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்களும், ஆயிரக்கணக்கான வீடியோக்களும் வெளியாகி உலகத்தையே அதிரவைச்சிருக்கு. இதுல டிரம்ப், பில் கிளிண்டன், பில் கேட்ஸ்னு உலகத்தோட பெரிய பெரிய ஆளுங்களோட பெயர்கள் அடிபடுறதுதான் இப்போ பயங்கரமான பேச்சா இருக்கு. இது ஒரு பக்கம் இருக்க, இந்த ஃபைல்ஸ் வெளியான நேரத்துலதான் இந்தியா – அமெரிக்கா இடையிலான முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியிருக்கு. இதப்பத்தி ஒரு பெண் நிருபர் துருவித் துருவி கேள்வி கேட்டதுதான் இப்போ பெரிய விவாதத்தையே கிளப்பிருக்கு.

​அந்த நிருபர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான டிரம்ப், “உன்னைய 10 வருஷமா பாக்குறேன், உன் முகத்துல ஒரு சிரிப்பைக்கூட நான் பார்த்ததில்லை” அப்படின்னு தனிப்பட்ட முறையில அட்டாக் பண்ணிப் பேசிட்டாரு. “நீ ஒரு மோசமான நிருபர், அதனாலதான் உங்க சேனலை யாரும் பாக்குறது இல்ல”ன்னு அவர் சொன்னது இப்போ செம வைரல். நாடு இதையெல்லாம் தாண்டி அடுத்த கட்டத்துக்குப் போகணும், இதெல்லாம் எனக்கு எதிரா நடக்குற சதி அப்படின்னு டிரம்ப் அடிச்சு சொல்றாரு. ஆனா அந்த நிருபருக்கு ஆதரவா அவங்க நிறுவனம் அறிக்கை விட்டு டிரம்ப்புக்கு பதிலடி கொடுத்துட்டு வராங்க.