உங்களின் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களது ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். அதன் பிறகு tnpds ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடும் ஆப்ஷனை தேர்வு செய்து அதில் சேர்க்கப்படும் விவரங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். மேலும் விவரங்களை பிடிஎப் பதிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதனை உங்கள் ரேஷன் கார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பித்து மீண்டும் ரேஷன் கார்டை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.