நாடு முழுவதும் 1500 ரேஷன் கடைகளில் செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமரின் செல்பி பாய்ண்டுகள் மூலம் பாஜகவுக்கு மைலேஜ் அதிகரிக்கப்படுவதே இதன் பின்னால் இருக்கும் திட்டம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் இதுபோன்று அம்மாநில அரசு  செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு அனுமதி மறுத்துள்ளது.