உதயநிதி ஸ்டாலின், தனது மகன் இன்பநிதிக்கு சினிமா துறையில் முக்கிய பொறுப்பை அளித்துள்ளார். இதுவரை செய்திகளாக வந்த தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளன. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) இன்பநிதி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், சினிமா மற்றும் விநியோக துறையில் அவருக்கு புதிய அடையாளம் உருவாகும் நிலையில் உள்ளது.
இந்த தகவல் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லிக்கடை’ திரைப்படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரில், “Red Giant Movies – Inban Udhayanidhi” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனூடாக இன்பன் உதயநிதி, தனது தந்தையின் பாதையில் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளார் என கூறப்படுகிறது.
