சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், கணவனைத் திட்டமிட்டு கொலை செய்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினோத் லிம்கா என்ற தொழிலாளியின் மனைவி பூனம், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான தனது காதலன் சுகட் தோபடேவுடன் இணைந்து, வினோத்தை கொலை செய்யத் திட்டமிட்டார். காதலன் மற்றும் அவரது கூட்டாளிகள், வினோத்திடம் 10,000 ரூபாய் தருவதாகவும், மனைவியை விட்டு பிரிந்து விடுவதாகவும் ஆசை வார்த்தை கூறி, அவனை பிலாஸ்பூருக்கு வரவழைத்துள்ளனர்.

மேலும் அங்கு சென்ற வினோத்தை, ரயில் தண்டவாளத்திற்கு அருகில் வைத்து கழுத்தை நெரித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் மிகக் கொடூரமாக கொலை செய்து, உடலை புதரில் வீசிவிட்டு கொலையாளிகள் தலைமறைவாகினர்.

இந்தச் சம்பவம் குறித்து, வினோத்தின் மனைவி பூனம் மட்டும் தனியாக ஊருக்குத் திரும்பியதால், அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், பூனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், ரயில் தண்டவாளத்தின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த வினோத்தின் அழுகிய நிலையில் உள்ள சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். இந்த வழக்கில் மனைவி பூனம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள காதலன் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க காவல்துறை ஜார்க்கண்ட் விரைந்துள்ளது.