பீகாரின் பேகுசாராய் மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் உதவி என்ற போர்வையில் நடத்தப்பட்ட மோசடி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுக்கச் சென்ற பெண் ஒருவரிடம், மோசடி நபர் ஒருவர் உதவி செய்வது போல நடித்து, ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் சிக்க வைத்துள்ளார்.
இதனால் அந்தப் பெண் குழப்பமடைந்திருந்த நேரத்தில், கார்டை மீண்டும் எடுத்துத் தருவதாகக் கூறி கார்டின் ரகசிய எண்ணைப் பெற்றுக்கொண்டு, அவரது கணக்கிலிருந்து 22,500 ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஏடிஎம் மையங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், அந்நியர்களின் உதவியை நம்பிப் பெற வேண்டாம் என்றும், தங்களின் ரகசிய எண்களைப் பகிரக்கூடாது என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுபோன்ற ஏடிஎம் மோசடிகள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பான பணப்பரிவர்த்தனைக்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
