ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேபா பிதியாமி என்பவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு அரிய வகை மாமரக் கன்று பரிசாகக் கிடைத்தது.

அதை அவர் தனது தோட்டத்தில் நட்டு வளர்த்து வந்த நிலையில், தற்போது அந்த மரத்தில் ஊதா நிறத்தில் மாம்பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.

சர்வதேச சந்தையில் ஒரு கிலோ சுமார் 3 லட்சம் ரூபாய் வரை விலை போகக்கூடிய உலகப் புகழ்பெற்ற “மியாசாகி” (Miyazaki) வகை மாம்பழங்கள் இவை என்பது தெரியவந்ததும் அவருக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக பயமும் கவலையும் தொற்றிக்கொண்டது.

இவ்வளவு மதிப்புமிக்க மாம்பழங்களை எப்படி விற்பனை செய்வது என்று தெரியாமலும், யாராவது திருடிச் சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்திலும் அவர் தனது நிம்மதியான தூக்கத்தையே தொலைத்து நிற்கிறார்.

மாம்பழங்களை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக, வேறு வழியின்றி அந்த மாமரத்தின் அடியிலேயே கட்டிலைப் போட்டு இரவு பகலாக அவர் காவலுக்குப் படுத்துறங்கி வரும் விநோத சம்பவம் இப்போது சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.