கர்நாடக மாநில விளையாட்டு வரலாற்றிலேயே ஒரு புதிய மைல்கல்லாக அமையவிருக்கும் உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட விளையாட்டு மைதானத் திட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா முறைப்படி அடிக்கல் நாட்டியுள்ளார்.

கர்நாடகாவின் இந்த்லாவாடி கிராமத்தில் அமையவிருக்கும் இந்த அதிநவீன மெகா மைதானத்தில், ஒரே நேரத்தில் சுமார் 80,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளைக் ரசிக்கும் வகையில் கேலரிகள் வடிவமைக்கப்பட உள்ளன.

அனைத்து நவீன உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடனும், காண்போரைக் வியக்கவைக்கும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளுடனும் உருவாகவுள்ள இந்த பிரமாண்ட விளையாட்டு அரங்கம், ஒட்டுமொத்த இந்திய விளையாட்டுத் துறையின் கவனத்தையும் தற்போது தன் பக்கம் ஈர்த்துள்ளது.