லீசெஸ்டரில் நடைபெற்ற உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் (WCL) 2025 தொடரின் எட்டாவது போட்டியில், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிக்காக ஆடிய ஏபி டிவில்லியர்ஸ், தனது பழைய அதிரடியை மீண்டும் நிரூபித்து காட்டி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக 41 பந்துகளில் சதம் விளாசிய இவர், 15 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 116 ரன்கள் (51 பந்துகள்) எடுத்தார். அவருடன் தொடக்க வீரராக இருந்த ஹாஷிம் அம்லா, 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
152 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ், எட்டு ஓவர்கள் மீதமுள்ள நிலையில் எந்த விக்கெட் இழப்புமின்றி மிகச்சிறப்பாக இலக்கை அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியில் டிவில்லியர்ஸ் மட்டுமின்றி ஹாஷிம் அம்லாவும் முக்கிய பங்கு வகித்தார். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பிய டிவில்லியர்ஸ், தன்னுடைய அதிரடி ஆட்டத்தை மீண்டும் நிரூபித்தார்.
🚨 41-YEAR-OLD AB DE VILLIERS SMASHED 41 BALL HUNDRED IN WCL 🚨
– The Greatest ever, AB….!!! pic.twitter.com/FZLyh5klgf
— Johns. (@CricCrazyJohns) July 24, 2025
“>
41 வயதிலும் டிவில்லியர்ஸ் இந்த அளவிற்கு ஆட்டம் காட்டுவது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி ரசிகர்களும், அவரது சாதனையை கொண்டாடி சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர். WCL 2025 தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இதுவே மிக வேகமான சதமாகப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
