மகாராஷ்டிராவின் தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் தற்சமயம் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருக்கும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அரசு எச்சரித்துள்ளது.
மேலும் இத்தகைய ஆபத்தான சூழ்நிலையிலும், பிவண்டி பகுதியில் ஒரு நபர் செய்த பேராபத்தான ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் நடுவே இருக்கும் ஒரு மின்சாரக் கம்பத்தின் மீது விறுவிறுவென ஏறியுள்ளார்.
Bhiwandi News: अरे, हा कसला स्टंट! वीजेच्या खांबावर चढला, उधाणलेल्या नदीत झेपावला, पुढे जे घडलं त्याने… https://t.co/ez0wtu0KY0
“>
இதனால் மின்சாரக் கம்பத்தின் உச்சிக்குச் சென்ற அவர், அங்கிருந்து ஆக்ரோஷமாக பாய்ந்தோடும் ஆற்று வெள்ளத்தில் தலைகீழாகக் குதித்து ஸ்டண்ட் செய்துள்ளார். மின்சாரம் பாயும் ஆபத்து மற்றும் ஆற்று வெள்ளத்தின் வேகம் ஆகிய இரண்டையும் பொருட்படுத்தாமல் உயிரைப் பணயம் வைத்து அவர் செய்த இந்தச் செயல் அங்கிருந்தவர்களை உரைய வைத்துள்ளது.
இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக அவர் ஆற்றில் குதித்த பிறகு தண்ணீரில் அடித்துச் செல்லப்படாமல் உயிர் தப்பினாரா அல்லது என்ன ஆனது என்பது குறித்த முழுக் கூடுதல் விபரங்கள் அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இத்தகைய ஆபத்தான ஸ்டண்ட்களை மக்கள் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
