ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி அமாய்ரா மீனா, பள்ளியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 18 மாதங்களாக சக மாணவர்களால் கடுமையான பாலியல் ரீதியான வார்த்தைகளுடனும், உளவியல் ரீதியாகவும் அமாய்ரா துன்புறுத்தப்பட்டு வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோரும் பலமுறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகமும், வகுப்பாசிரியரும் அதை அலட்சியப்படுத்தியுள்ளனர்.
தற்கொலை நடந்த அன்று, அமய்ராதனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வகுப்பாசிரியரிடம் பலமுறை உதவி கேட்க முயன்றதும், ஆசிரியை அவரைத் தொடர்ந்து புறக்கணித்ததும் தற்போது சிசிடிவி வீடியோ மூலம் நிரூபணமாகியுள்ளது.
On Nov 1, 2025, Amaira, a Class 4 student, died by suicide after jumping from the fourth floor of the Neerja Modi School in Jaipur.
She had been bullied for 18 months, with classmates targeting her using “bad words,” many of which carried sexual undertones. However, her class… pic.twitter.com/iiS4J6UFwm
— THE SKIN DOCTOR (@theskindoctor13) July 9, 2026
“>
குற்றப்பத்திரிக்கையில் குற்றவாளிகள் தாக்கல் செய்த பள்ளியின் முதல்வர் மற்றும் நிறுவனர் பெயர்கள் விடுபட்ட நிலையில், பெற்றோர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், தகுதியற்ற ஆசிரியர்களை நியமித்தது மற்றும் மாணவர்களுக்கு போதுமான உளவியல் ஆலோசகர்கள் இல்லாததே இந்த விபரீதத்திற்கு காரணம் என கல்வித்துறையின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
