உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாகப் பொதுமக்களுக்குப் பணவீக்க பாதிப்பு அதிகரித்து வரும் வேலையில், முன்னணி ஐடி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் ஒரே நேரத்தில் 4,800-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்த திடீர் பணிநீக்கம் ஐடி துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பொருளாதார ரீதியாகப் பக்கபலமாக இருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒரு மாபெரும் நிவர்த்திப் பேக்கேஜை தெரிவித்துள்ளது.
இதன்படி, வேலையிழந்த ஊழியர்கள் அடுத்த 9 மாதங்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது முழுச்சம்பளத்தைப் பெறலாம் என்றும், அதுமட்டுமின்றி அடுத்த 6 மாத காலத்திற்கு அவர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் தங்களது அடுத்த வேலை தேடும் இடைவெளியில் எந்தவொரு நிதி நெருக்கடியிலும் சிக்கக்கூடாது என்பதற்காகவே இந்தத் தாராள முடிவு எடுக்கப்பட்டதாக மைக்ரோசாஃப்ட் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
