பீகார் மாநிலத்தை சேர்ந்த 42 வயது ரிஸ்வான் ஆலம் என்பவர் அவரது வீட்டிலேயே இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவியே தன் காதலனுடன் சேர்ந்து கொடூரமாக அரங்கேற்றிய அதிர்ச்சி உண்மை 36 மணி நேர போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருமணமான 13 நாட்களிலேயே ரிஸ்வான் வேலைக்காகக் குவைத் சென்று 13 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பிய நிலையில், அந்த இடைவெளியில் அவரது வீட்டில் வாடகைக்கு இருந்த 24 வயது அன்வர் உசேன் என்பவருடன் மனைவி டெய்சி பர்வீனிடம் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை ரிஸ்வான் எதிர்த்ததால், நள்ளிரவில் வீட்டின் கதவை திறந்து வைத்து காதலனை வரவழைத்த மனைவி, தூங்கிக்கொண்டிருந்த கணவனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ய உதவியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by kashishbohra (@kashishbohraa)

“>

பின்னர் திருடர்கள் வந்து கொன்றதாக நாடகமாடி, போலீசாரை திசைதிருப்ப மொபைல்களை ஊருக்குள் புதைத்துவிட்டு கம்பியை ஆற்றில் வீசியுள்ளனர். ஆனால், மொபைல் கால் ரெக்கார்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வாக்குமூலங்களை வைத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், கொலையாளி மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.