இணைய உலகத்தில் தினந்தோறும் பாம்புகள் தொடர்பான பல திகிலூட்டும் வீடியோக்கள் வெளியாகி  தூக்கத்தைக் கெடுப்பது வழக்கம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்போரை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. உலகிலேயே மிக ஆபத்தான, ஒருமுறை கடித்தால் யானையையே வீழ்த்தக்கூடிய வீரியம் கொண்ட ராஜநாகத்திற்கு ஒரு நபர் பியூட்டி குயின் போல ‘மேக் ஓவர்’ செய்த விசித்திரக் கூத்துதான் அது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்டான கார்லோஸ் அட்டிலா என்பவர் இந்த விபரீத சாகசத்தை அரங்கேற்றியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Carlos Atila (@carloshairstylist_)

வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு ராட்சத கிங் கோப்ரா சலூன் நாற்காலியில் மிகவும் அமைதியாகச் சுருண்டு படுத்துக் கிடக்கிறது. அதன் தலைப்பகுதியில் பெண்களைப் போல நீளமான செயற்கை தலைமுடி பொருத்தப்பட்டுள்ளது.

அதனை மிக சாதாரணமாக அணுகும் கார்லோஸ், அந்தப் பாம்பின் தலைமுடியை வாஷ் பேசினுக்குக் கொண்டு சென்று அலசி, அதற்குப் பிரத்யேகமாக வண்ணம் தீட்டி, ட்ரையர் மூலம் உலர வைத்து, பின்னர் சீப்பால் வாரியும் விடுகிறார். இந்த அதிரடி பியூட்டி பார்லர் ட்ரீட்மெண்ட் முழுவதும் அந்த விஷப் பாம்பு யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல் அமைதியாக ஒத்துழைப்புக் கொடுத்ததுதான் பெரும் ஆச்சரியம்.

கார்லோஸின் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ தற்சமயம் 1.5 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.