ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று தெளிவான சிந்தனை இருந்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும். தயவு செய்து குழப்பம் அடைய வேண்டாம். சில பணிகள் நடக்கவில்லையே என்று கவலைப்படவும் வேண்டாம். தெய்வீக பணிகளில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். எடுத்த காரியத்தை லாபகரமாக செய்து முடிப்பீர்கள். சாதகமான நல்ல பலன் ஏற்படும். பல தடுமாற்றம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பெரியோர்களின் ஆலோசனை கை கொடுக்கும். மனதில் உள்ள விஷயங்களை பகிர்வீர்கள். பெண்கள் இன்று மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். ஆர்வத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று மாணவர்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்துவது நல்லது. குழப்பம் அடைய வேண்டாம். கல்வி மீது ஆர்வம் அதிகரித்து வெற்றி பெற முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 3, 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்