மிதுன ராசி அன்பர்களே,

இன்று சின்ன சின்ன தடைகளும் தாமதங்களும் ஏற்படும். எதிலும் மன தடுமாற்றம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சேமித்து வைத்த பணம் செலவாகும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். லாபம் பன்மடங்கு கூடும். நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறலாம். மூடநம்பிக்கைகளை கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளால் எரிச்சல் அடைவீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

இன்று பெண்கள் காலையில் பதட்டமாக காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். படிப்பில் அக்கறை அதிகரிக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 3, 5 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்