கடகம் ராசி அன்பர்களே,

இன்று மிகவும் அற்புதமாக செயல்படக்கூடிய சூழல் உள்ளது. காலையில் கலகலப்பான செய்திகள் வரும். திருமண பேச்சுகள் நல்லபடியாக முடியும். வெளிநாட்டுக்கு செல்ல எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். மன தைரியம் அதிகரிக்கும். இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி கூடும். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. கொடுக்கல் வாங்கலை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். வெற்றி பெரும் சூழல் உள்ளது. சகோதர சகோதரிகள் உங்களிடம் உதவி கேட்டு வரக்கூடும். வார்த்தைகளை உச்சரிக்கும் போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் எது சரி எது தவறு என்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பொறுப்புடன் செயல்படுவீர்கள். விளையாட்டு துறையில் உங்களால் சாதிக்க முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 5, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்