சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று எதிலும் சிறப்புடன் செயல்பட்டு வெற்றி பெறும் சூழல் உள்ளது. அதிகாலையிலே நற்செய்தி தேடி வரும். திட்டமிட்ட பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமையான பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி கூடிவிடும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். சுப செலவுகள் ஏற்படலாம்.

வீடு கட்டும் முயற்சியில் வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகளும் எளிமையாக முடியும். பயம் வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பின்னர் சரியாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடிவிடும். இன்று மாணவர்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவராக காணப்படுவீர்கள். எது சரி எது தவறு என்று புரிந்து கொள்ளாமல் செயல்படுவீர்கள். யோசித்து முடிவு எடுப்பது நல்லது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 5, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்