கன்னி ராசி அன்பர்களே,

இன்று அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளை அனுபவிக்கும் சூழல் உள்ளது. புதிய தொழில் உங்களுக்கு கண்டிப்பாக கை கொடுக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும். தடைப்பட்ட காரியங்கள் சூடு பிடிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.

இன்று எதிலும் நாட்டம் அதிகரிக்கும் உயர்வான எண்ணங்கள் மேலோங்கும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். காரிய வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இன்று பெண்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். மன அழுத்தம் சரியாகும்.

இன்று மாணவர்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவராக இருப்பீர்கள். முன்னேற்றத்திற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். எது சரி எது தவறு என்று தெரியாமல் குழம்பி போவீர்கள். பெற்றோர் சொல் பேச்சு கேட்டு நடக்க பாருங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்