துலாம் ராசி அன்பர்களே,

இன்று மிகவும் பரபரப்புடன் காணப்படுவீர்கள். மனதை அமைதிப்படுத்த ஆர்வம் கொள்ளுங்கள். எதையும் சிந்தித்து செயல்படுத்துங்கள். எந்த பிரச்சனையிலும் ஈடுபட வேண்டாம். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

இறைவன் அருளால் எல்லா அற்புதமாக நடக்கும். மூடநம்பிக்கைகளில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். பரிகாரம் என்ற பெயரில் பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம். பெண்கள் சிந்தித்து எடுக்கும் முடிவுகளால் வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கையுடன் எந்த செயலிலும் ஈடுபடுங்கள். யோகமான நல்ல பலன் ஏற்படும்.

முன்கோபத்தை தவிர்த்திடுங்கள். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். கல்வி மீது அக்கறை அதிகரிக்கும். புதுப்புது விஷயங்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 6, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்