விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று அற்புதமாக செயல்பட்டு வெற்றி பெரும் சூழல் உள்ளது. பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை உடைத்தெறிவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்படும். திருமணம் முயற்சிகளில் நல்ல வரன்கள் வீடு தேடி வரும். பெண்கள் இன்று முழு முயற்சியுடன் எந்த செயலிலும் ஈடுபடுவீர்கள். இந்த நாளை அற்புதமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். கவலைகளை மறந்து செயல்பட முடியும். முன்கோபம் அவ்வப்போது வெளிப்படும்.

இன்று மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 6, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்