மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். மற்றவர்கள் கடுமையாக நினைத்த பணியை நீங்கள் எளிமையாக செய்து முடிப்பீர்கள். முன்னெச்சரிக்கையுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெற முடியும். இன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. கருத்து வேற்றுமை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சண்டை சச்சரவுகள் மனஸ்தாபங்கள் சரியாகும். நண்பர்கள் மத்தியில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் பிரச்சனை தீர கடுமையாக உழைப்பீர்கள். பெண்கள் இன்று மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள். காரியங்களை மிகவும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

இன்று மாணவர்கள் மிகவும் யோசித்து சில முடிவுகள் எடுப்பது நல்லது. கல்வி மீது முழு அக்கறை வேண்டும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். கல்வியில் சாதிக்க முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 2, 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்