துலாம் ராசி அன்பர்களே,

இன்று எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி பெறும் சூழல் உள்ளது. நல்ல விஷயங்கள் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தும். திறமையால் வெற்றி பெறுவீர்கள். அற்புதமாக காய் நகர்த்தி முன்னேற முடியும். இன்று சுகபோக வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். ஏற்றங்கள் மாற்றங்கள் ஏற்படும்.

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். கலைத்துறையினருக்கு டென்ஷன் ஏற்படலாம். உடன் இருப்பவர்களிடம் மனம் விட்டு பேசுவதால் கருத்து வேறுபாடுகள் வராமல் தவிர்க்க முடியும். பெண்களுக்கு இன்று யோகமான நாள். பெரிய பிரச்சினைகளுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எதிலும் அவசரப்பட வேண்டாம். பொறுமை அவசியம்.

இன்று மாணவர்கள் எந்த முடிவை எடுக்கும்போதும் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும். கல்வி மீது அக்கறை கொள்ள வேண்டும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்