நடிகர் ராம்சரண் மற்றும்  உபஸ்னா தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் தங்களுடைய குழந்தைக்கு கிளின் காரா கோனிடல்லா என்ற பெயர் சூட்டி இருக்கிறார்கள். தனது குழந்தையின் பெயர் குறித்த அறிவிப்பையும் ராம்சரண் குடும்பம் வெளியிட்டுள்ளது. மேலும் குழந்தை தொட்டிலில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் ராம்சரண் குழந்தைக்கு அம்பானி குடும்பம் தங்கத் தொட்டில் பரிசாக கொடுத்ததாக ஒரு தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த செய்தி ஆனது உண்மை இல்லை என்றும் யாரோ இது குறித்து வதந்தியை பரப்பி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.