தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போவதற்காக திட்டமிட்டுள்ளவர்களுக்காக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு தீபாவளி அக்டோபர் 20, திங்கள்கிழமை வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதன் முன்நாள் அக்டோபர் 18 (சனி), அக்டோபர் 19 (ஞாயிறு) ஆகிய நாட்கள் விடுமுறை தினங்களாக அமைகின்றன. இதனால் தீபாவளிக்கு மொத்தம் மூன்று நாள் தொடர் விடுமுறை கிடைக்கும். இதை பயன்படுத்தி பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவதை முன்னிட்டு, ரயில்வே துறை முன்பதிவு பணிகளை அறிவித்துள்ளது.
அதன்படி, அக்டோபர் 17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் திங்கள் காலை 8 மணிக்கு IRCTC இணையதளத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 18-க்கு செவ்வாய்க்கிழமை, 19-க்கு புதன்கிழமை மற்றும் 20-ம் தேதிக்கான புக்கிங் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு துவங்கும். ரயில்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் மற்றும் பறிபோகும் முன்பதிவுகளை எண்ணிக்கையில் கணக்கிட்டால், பயணக் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் விரைவாக முன்பதிவு செய்யுமாறு ரயில்வே துறையினர் கேட்டுள்ளனர்.
