தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் பட்டி தொட்டி எல்லாம் இன்று வரை ஒழித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ரஞ்சிதமே பாடலுக்கு வயிற்றில் உள்ள குழந்தை உதைக்கும் காணொளி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று ரஞ்சிதமே பாடலுக்கு தூங்கிக் கொண்டிருக்கும்போது எழுந்து நின்ற நடனமாடும் காட்சி இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனை பார்க்கும்போது குழந்தைக்கு ரஞ்சிதமே பாடல் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய முடிகிறது.