தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினி சமீபத்தில் இமயமலை பயணம் சென்றிருந்த நிலையில் அதன் பிறகு உத்திரபிரதேசம் மாநிலம் சென்ற அவர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கினார். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நேற்று முன்தினம் சென்னை திரும்பிய ரஜினி, வயது இளைஞராக இருந்தாலும் யோகிகள் காலில் விழுவது என்னுடைய வழக்கம் என்று கூறி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் எதிர்காலத்தில் யோகி ஆதித்யநாத் பிரதமராக வாய்ப்புள்ளதால் தான் அவரது காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பேசிய உபி காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ், பிரதமர் மோடியின் காலில் கூட ரஜினி விழுந்து வாங்கியதில்லை. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் பட்டியல் குறித்த பேச்சில் யோகியின் பெயர் அடிபடுவதால் தான் ரஜினி இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.