தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை தேடி வரும் நபர்களுக்கு மத்தியில் சுய தொழில் செய்து பெண்கள் பலரும் வருமானம் ஈட்டி வருகிறார்கள். இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பெண்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் அனைவருக்கும் மூன்று லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு விருப்பம் உள்ள பெண்கள் குடும்ப வருமானம் 1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 25 முதல் 55 வயதிற்கு உட்பட்டவர் ஆக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் கேட்டரிங் மற்றும் பியூட்டி பார்லர் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்படும். மேலும் தொழில் தொடங்குவதற்கு 30 சதவீதம் மானிய தொகையும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் கீழ் உத்யோகினி திட்டம், அன்னபூர்ணா திட்டம், முத்ரா யோஜனா திட்டம், தேனா சக்தி திட்டம், யூகோ மகிளா பிரகதி தாரா திட்டம், ஸ்த்ரீ  ஆகிய திட்டங்கள் மூலமாக பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.