இந்திய அஞ்சல் துறையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மஞ்சள் ஆயுள் காப்பீடு திட்டம் ஆகியவை மிகவும் பிரபலமான திட்டங்கள். மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்த காப்பீடு திட்டங்களில் மிகவும் குறைவான அளவிலான பிரீமியம் தொகையில் அதிக காப்பீடு வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கான போனஸ் விகிதங்கள் அதிகமாக வழங்கப்படும். தபால் துறை இயக்குனராகம் ஆனது தற்போது பி எல் ஐ மற்றும் ஆர்பிஎல் ஐ திட்டங்களின் உதிர்வுத் தொகையில் 5 சதவீதம் டிடிஎஸ் கழிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒரு வருடத்திற்கு நான்கு புள்ளி ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் ஒரு வருடத்திற்கு பிறகு 2.3% ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது 5% டிடிஎஸ் தொகை கழிப்பதற்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் பாலிசிதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.