உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள லோஹோடா கிராமத்தில், டிரான்ஸ்பார்மர் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சந்தோஷ் குமார் என்ற ஒப்பந்த மின்வாரிய ஊழியர், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதற்காக மின் நிலையத்திலிருந்து (Power House) முறையாக ‘ஷட்-டவுன்’ பெறப்பட்ட பின்னரே அவர் மின்கம்பத்தில் ஏறியுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக திடீரென 11,000 வோல்ட் மின்சாரம் பாய்ந்ததால், சந்தோஷ் உடல் முழுவதும் தீப்பிடித்துக் கருகினார்.
लापरवाही लील गई एक और कर्मचारी की जिंदगी.. चंद सेकेण्ड मे ही शरीर बन गया आग का गोला
UP के सोनभद्र मे बिजली का नया ट्रांसफर लगा रहे संविदा लाइनमैन संतोष की जान चली गई। खम्बे पर काम करते समय अचानक बिजलीघर से सप्लाई चालू हुई। चंद सेकेण्ड मे संतोष कुमार के शरीर मे आग लग गई। कुछ देर… pic.twitter.com/NhoH3TtCWE
— TRUE STORY (@TrueStoryUP) February 28, 2026
அவரை மீட்ட சக ஊழியர்கள், காசி இந்து பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். உயிரிழந்த சந்தோஷிற்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மின்சார வாரியத்தின் கடும் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறி, சக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
