பஞ்சாபில் ஒரு வசதியான குடும்பம், கோடை வெயிலில் தாகத்துடன் வருபவர்களுக்காகத் தங்கள் வீட்டின் வாசலிலேயே இலவசக் குடிநீர் குழாயை அமைத்து ஒரு நெகிழ்ச்சியான முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. வட இந்தியாவில் 40 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், அவ்வழியே செல்லும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் டெலிவரி ஊழியர்கள் எவ்வித அனுமதியும் இன்றி தாகம் தீர்த்துக்கொள்ள இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

​சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “வீட்டின் அளவை விட மனதின் அளவுதான் முக்கியம்” என்று அக்குடும்பத்தைப் பாராட்டி வருகின்றனர். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், தங்கள் குடும்பமும் கடந்த 8 ஆண்டுகளாக இதேபோல் விவசாயிகளுக்காகக் கதவைத் திறந்து வைத்துத் தாகம் தீர்த்து வருவதாகவும், இதை ஒருபோதும் விளம்பரப்படுத்த நினைத்ததில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.