மதுரை மாவட்டம் முத்துப்பட்டி 73வது வார்டு பகுதியில் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஒன்றை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், எங்களைப் பொருத்தவரை சாதாரண ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் பட்ஜெட் அமைய வேண்டும் என்பதுதான் விருப்பம். வக்பு வாரிய மசோதா வரும்போது எடப்பாடி பழனிச்சாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லிட்டாரு.
இப்படி ஒரு முதல்வரை பெறுவதற்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். பேசறது எல்லாத்தையும் பொய்யா பேசுகின்றார். நீதிமன்றமே தமிழ்நாட்டின் இந்த அரசை கண்டிக்கிறது. தமிழகத்தில் அரசாங்கம் மற்றும் காவல்துறை என எதுவும் சரி இல்லை சட்ட ஒழுங்கு மோசமாக இருக்கின்றது என நீதிமன்றம் சொல்லி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் விவகாரத்தில் யார் அந்த சார் என்பது போய் தற்போது யார் அந்த கார் என்று பேசப்பட்டு வருகின்றது. திமுக காரர்கள் போலீஸிடம் சொல்லி காரில் வந்தவர்கள் திமுக காரர்கள் கிடையாது என்று சொல்லுங்கள் என பேசி வருகிறார்கள். அவர்களும் திமுகவினர் இல்லை என்று போலீசின் சொல்கிறார்கள். நடப்பதை எல்லாத்தையும் பூதாகரமாக மாற்றி பேசுகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இதையெல்லாம் எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும் என்று செல்லூர் ராஜூ காட்டமாக பேசியுள்ளார்.
