கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பெண்கள் பாதுகாப்புக் குறித்து முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அவர் பேசுகையில், “யாரை நம்பியும் தாமதமான இரவு நேரத்தில் தனியாகச் சென்று சந்திக்காதீர்கள். நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், 24 மணி நேரமும் பெற்றோர், காவல்துறையினர் உடனிருக்க மாட்டார்கள் என்றும், பெண் குழந்தைகளை அவர்கள் நல்லொழுக்கத்தைப் போதித்து வளர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“>