புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜய், தவெகவினரை ஆச்சரியக்குறி, தற்குறி என எந்தக் குறியாகச் சொன்னாலும் தங்களுக்குக் கவலையில்லை என்றும், எங்களுடைய இலக்கு தேர்தல் குறிதான் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், “தமிழகத்தை வாழ வைக்க திமுகவால்தான் முடியும். தவெக என்பது பா.ஜனதாவின் ‘சி டீம்’ தான்” என்று ரகுபதி விமர்சித்துள்ளார். ஒரு காலத்தில் பாஜகவின் ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
