இணையத்தில் குறுக்கு வழிகளில் உடனே ஜெயிக்கத் துடிக்கும் இந்த நவீனக் காலக்கட்டத்தில், ரயில் பயணத்தின் போது தந்தை ஒருவர் தனது குட்டி மகளுக்குக் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் கடின உழைப்பைப் பற்றி சொல்லிக் கொடுத்த நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அந்த வைரல் வீடியோவில், ஏசி பெட்டியில் பயணம் செய்யும் தந்தை, ஜன்னல் வழியாக வெளியே தெரியும் பொதுப் பெட்டியின் கடுமையான கூட்ட நெரிசலையும், அங்கு மக்கள் நின்று கொண்டே கஷ்டப்பட்டு பயணம் செய்வதையும் காட்டி, “வாழ்க்கையில கல்வியும், கடின உழைப்பும், நாம் சம்பாதிக்கும் பணமும் எவ்வளவு முக்கியம்; இன்று நாம் எடுக்கும் சரியான முடிவுகள் தான் நம்முடைய எதிர்கால வசதியைத் தீர்மானிக்கும்” என்று எதார்த்தமான முறையில் பாடம் நடத்துகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by ज़िन्दगी गुलज़ार है ! (@zindagi.gulzar.h)

“>

பாடப் புத்தகங்கள் சொல்லித் தராத ஒரு பெரிய வாழ்க்கை தத்துவத்தை இந்த தந்தை மிக எளிமையாகத் தன் மகளுக்குப் புரிய வைத்ததைப் பார்த்துப் பாராட்டும் நெட்டிசன்கள், அதே வேளையில் “வாழ்க்கையில் உழைப்பு மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும், பொருளாதாரப் பின்னணியும் கூட முக்கியம்” என்ற மாற்று விவாதத்தையும் இந்த வீடியோவின் கீழ் காரசாரமாகக் கிளப்பி வருவதால் இக்காணொளி தற்போது சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது.