டேராடூனைச் சேர்ந்த அங்குர் அகர்வால் வெளியிட்டுள்ள இந்தச் செய்திக் குறிப்பில், பெரும்பாலான குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் 5 வயது இளம் வயதிலேயே, வேதிகா வர்மா என்ற சிறுமி கிரிக்கெட் மைதானத்தில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு தனது கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்.
மேலும் வெறும் 8 மாதக் குழந்தையாக இருக்கும் போதே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய இந்தச் சிறுமி, தற்போது மின்னல் வேகத்தில் வரும் பந்துகளை லாவகமாகப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். சிறுமி வேதிகாவின் அசத்தலான இந்த கிரிக்கெட் திறமை மற்றும் அர்ப்பணிப்பு, மைதானத்தில் பயிற்சி பெறும் மற்ற வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, நாட்டின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடனும், கண்களில் மாபெரும் கனவுகளுடனும் இந்த 5 வயதுச் சிறுமி கிரிக்கெட் மைதானத்தில் தினமும் கடுமையாக வியர்வை சிந்தி உழைத்து வருகிறார்.
