திமுக எதிர்ப்பை விட்டுவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பதாகப் பரவிய செய்திகள் அதிமுக தொண்டர்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தேர்வு முறைகேடு விவகாரத்தை கையில் எடுத்துள்ள இபிஎஸ், ஆளும்கட்சியை வழக்கம் போல ‘விடியா திமுக’ என்று கடுமையாகச் சாடியுள்ளார். அதேநேரம், இந்த விவகாரத்தில் வெறும் அறிக்கை மட்டும் போதாது, முறைகேடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நேரடியாக தவெக-விற்கும் செக் வைத்துள்ளார்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் இபிஎஸ்-ஸின் இந்த அதிரடி யு-டர்ன், அதிமுக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் மாஸ் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளும்கட்சியான திமுகவை அம்பலப்படுத்துவதோடு, புதிய வரவான தவெக தங்களை மீறி எதிர்க்கட்சி இடத்தை அவ்வளவு எளிதாகப் பிடித்துவிட முடியாது என்பதையும் அவர் இதன் மூலம் உணர்த்தியுள்ளார். இரண்டு பெரிய சக்திகளையும் ஒரே நேரத்தில் எதிர்த்து அரசியல் செய்யும் இந்த அதிரடிப் போக்கு, வரும் தேர்தலில் இபிஎஸ்-க்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என அரசியல் களம் சூடேறியுள்ளது.
