நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவரின் கார், அங்குள்ள பொதுப் பேருந்து மோதியதால் சேதமடைந்தது. வழக்கமாக இதுபோன்ற விபத்துகளில் தவறு செய்தவர்கள் தப்பி ஓட நினைக்கும் சூழலில், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் தனது தவறை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி, விபத்தை நேரில் பார்த்த முற்றிலும் அறியாத ஒரு வழிப்போக்கர், காரின் உரிமையாளருக்கு விபத்து குறித்த விவரங்களையும், தான் அதற்கு சாட்சி என்பதையும் ஒரு குறிப்பு எழுதி காரில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அந்த இந்தியப் பெண் சமூக வலைத்தளத்தில் வீடியோவாகப் பகிர்ந்து, ஓட்டுநரின் நேர்மையையும் அந்த அந்நிய நபரின் மனிதநேயத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

“>

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “நியூசிலாந்து போன்ற நாடுகளில் நேர்மைக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுகிறது” என்றும், “தற்போதைய உலகிற்கு இதுபோன்ற நல்ல செயல்கள்தான் மிகவும் தேவை” என்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.