அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் புதிய பாஸ்போர்ட்டை அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆனால், அந்த பாஸ்போர்ட் புத்தகத்தில் டிரம்ப் மிகவும் ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் புகைப்படம் இடம்பெற்றிருப்பதோடு, அதன் கீழே “WELCOME.. BUT BE GOOD..” (வரவேற்கிறோம்.. ஆனால் ஒழுங்காக இருங்கள்) என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருப்பது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டில் தேசிய சின்னங்கள் அல்லது வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், டிரம்ப் தனது பாணியில் இப்படி ஒரு வாசகத்தையும், புகைப்படத்தையும் சேர்த்திருப்பது பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

​அமெரிக்காவுக்குள் நுழையும் வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இந்த வாசகம் இருப்பதாக சோஷியல் மீடியாக்களில் காரசாரமான விவாதங்கள் வெடித்துள்ளன. டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையை அவருடைய ஆதரவாளர்கள் “இதுதான் டிரம்ப் ஸ்டைல்” என்று கொண்டாடி வரும் வேளையில், எதிர்க்கட்சியினரோ சர்வதேச நாடுகளுக்கு முன்னால் இது அமெரிக்காவின் நற்பெயரைக் கெடுக்கும் செயல் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.