மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது, முதலமைச்சர் விஜய் அவரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது மரியாதை நிமிட்சயமாக தமிழ்நாட்டு முறைப்படி தயாரிக்கப்பட்ட பாரம்பரிய மசாலாப் பொடிகளை அமித்ஷாவிற்குப் பரிசாக வழங்கினார். இரு தலைவர்களுக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு மிகச் சுமூகமான சூழலில் நடைபெற்ற நிலையில், மத்திய அரசுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நல்லுறவை எக்காரணம் கொண்டும் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, சட்டமன்ற விவாதத்தின் போது அமைச்சர் வன்னி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதனால் அவையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. உடனடியாகத் தலையிட்ட மற்றொரு அமைச்சரான ஆதவ் அர்ஜுனா, அவை விதிகளின்படி அந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவு செய்யாமல் நீக்க நடவடிக்கை எடுத்தார். மத்தியத் தலைவர்களுக்கு எதிரான விமர்சனங்களை ஆவணங்களில் இருந்து நீக்கிய இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
பாஜக தலைமையிலான மத்திய அரசை அரசியல் ரீதியாகத் தேவையின்றி விமர்சிக்கவோ அல்லது கடுமையான வார்த்தைகளால் சாடவோ வேண்டாம் என்று தனது அமைச்சரவை சகாக்களுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையான உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதித் தேவைகள், புதிய திட்டங்களுக்கு அனுமதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற விஷயங்களில் மத்திய அரசின் ஒத்துடையை எவ்வித தடையுமின்றிப் பெற வேண்டும் என்பதே இந்த ராஜதந்திர நடவடிக்கையின் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம்.. விஜய் போட்ட ஆர்டர்
.சமீபத்தில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வருகை தந்திருந்தார். அப்போது முதலமைச்சர் விஜய் அவரை நேரில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச்… pic.twitter.com/vBPpfwFh3M
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 28, 2026
“>
மத்திய அரசிடம் உரிமையுடன் நமது கோரிக்கைகளை முன்வையுங்கள், ஆனால் அவர்களை ஒருபோதும் விமர்சிக்காதீர்கள் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக அமித் ஷா அல்லது மோடியை எதிர்த்துப் பேசுவதைத் தவிர்க்குமாறும், மத்திய அரசுடன் இணக்கமான உறவைப் பேணி தமிழகத்திற்குத் தேவையான நலத்திட்டங்களைச் சிறப்பாகப் பெற்றுத் தருமாறும் தனது அமைச்சர்களுக்கு அவர் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
